பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் படி, அரியலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடைசி 2 இடங்களிலும் உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாவட்டவாரியாக முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்களை அறிவோம்:

முதல் 5 இடங்களைப் பெற்ற மாவட்டம்

அரியலூர் – 98.82%
ஈரோடு – 97.98%
திருப்பூர் – 97.53%
கோயம்புத்தூர் – 97.48%
கன்னியாகுமரி – 97.01%

அரசு பள்ளி அளவில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாவட்டங்கள்

அரியலூர் – 98.32%
ஈரோடு – 96.88%
திருப்பூர் – 95.64%
கன்னியாகுமரி – 95.06%
கடலூர் – 94.99%

பின்தங்கிய வேலூர்: தலைநகர் சென்னையில் தேர்ச்சி விகிதம் 94.44 சதவீதமாக உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 90.79%-மும், கள்ளக்குறிச்சியில் 90.96%-மும் தேர்ச்சி பதிவாகியுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய