சென்னை
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதால், நீர்மட்டத்தை  நீர்மட்டத்தை 22 அடிக்கும் கீழ் வைத்து கண்காணிக்கும் பொருட்டு மதியம் 2 மணி முதல் 500 கியூசெக் நீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு அளவு 24 அடி.

5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதகிலிருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய நீரால், அதனை ஒட்டிய குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோன்று, புழல் ஏரியின் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கடலில் கலக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
சென்னை நகரத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது எதிர்பார்த்த 3.7 செ.மீ அளவை விட அதிகமாக இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, தாராமணி, கேளம்பாக்கம், கோலப்பாக்கம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பெய்தது, அம்பத்தூர், மகாபலிபுரம், தாமரைபாக்கம், ரெட் ஹில்ஸ் பகுதியில் 3 செ.மீ மழை பெய்தது.