ஒரே சமயத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி வெளியீடு என ‘கிங்ஸ்டன்’ புதிய முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறது.
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கிங்ஸ்டன்’.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டார்கள். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலுமே தோல்வியை தழுவியது.
தற்போது இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவை ஒரே சமயத்தில் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ‘கிங்ஸ்டன்’ ஒளிபரப்பாகவுள்ளது. அதே நேரத்தில் ஜீ5 ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகவுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு முதன்முறையாகும்.
தெலுங்கில் ‘சங்கிராந்திக்கு வஸ்துணாம்’ படத்தினை இதே முறையில் தான் ஜீ நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.