ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் அசத்தினர்.
இதையடுத்து பிற்பகல் நடைபெற்ற எஃப் 64 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்து, தங்கம் வென்றுள்ளார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் 68.55 மீட்டர் தூரம் வீசி எறிந்து தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க பட்டியலில் 2 தங்கம் 4 வெள்ளி 1 வெண்கலம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.