ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது, இந்தியாவில் பெரும் பிரச்சினையாக நீடித்து வருகிறது. இந்நிலையில், அத்தகைய துயர நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்துவந்த பாலக்காடு – போத்தனூர் வழித்தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கவில்லை எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ள செய்தி நிம்மதி அளிக்கிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
மின்சார வேலியால் தாக்கப்படுதல், விஷமூட்டப்படுதல், வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களால் இந்தியாவில் யானைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. ஏராளமான ரயில்வே தண்டவாளங்கள் காடுகளின் வழியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.