பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு அணி இரண்டிலும் வெற்றி பெற்று அசாத்திய பலத்துடன் வீறுநடை போட்டு வருகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (சிஎஸ்கே) அதன் சொந்த மைதானத்திலும் தோற்கடித்து வலுவான அணியாக மாறியுள்ளது பெங்களூரு.
முதல் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான பிலிப் சால்ட், விராட் கோலி ஆகியோர் அரை சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதேபோல் தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா ஆகியோரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
ADVERTISEMENT

javascript:false
javascript:false
javascript:false
javascript:false
javascript:false
இந்நிலையில், இன்றைய ஆட்டம் பெங்களூரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற உள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல் பவுலிங்கிலும் பெங்களூரு அணி எதிரணி வீரர்களை மிரட்டி வருகிறது. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஷ் ஹேசில்வுட் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கிருணல் பாண்டியா 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
எனவே, குஜராத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், லியாம் லிவிங்ஸ்டன், கிருணல் பாண்டியா ஆகியோரிடமிருந்து சிறப்பான செயல்திறனை எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் மறுமுனையில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இந்த ஆட்டத்தைச் சந்திக்கிறது.
முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மும்பையுடன் மோதிய 2-வது ஆட்டத்தில் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. எனவே, 3-வது போட்டியை வெற்றியுடன் முடிக்க குஜராத் அணி வீரர்கள் முயற்சி செய்வர். மும்பை அணியுடனான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். முதல் 2 போட்டிகளிலுமே சாய் சுதர்ஷன் அரை சதம் விளாசினார்.
எனவே, இன்றைய ஆட்டத்திலும் அவரது அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கலாம். பவுலிங்கில் முகமது சிராஜ், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதேபோல் பிரசித் கிருஷ்ணா, காகிசோ ரபாடா, சாய் கிஷோர் ஆகியோரும் எதிரணி வீரர்களை மிரட்டி வருகின்றனர். இவர்களிடமிருந்தும் உயரிய செயல்திறனை இன்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
கருத்தைப் பதிவு செய்யபெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.