மின் புகார்களுக்கு தீர்வு காண ஏப்.5-ல் சிறப்பு முகாம்

சென்னை: மின்சாரம் தொடர்பான புகார்களுக்கும் தீர்வு காணும் வகையில், வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 5-ம் தேதியன்று காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் பெறப்படும் அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களின் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். எனவே, மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *