ஐபிஎல் 2021 பிளே ஆப் சுற்று 2வது எலிமினேட்டரில் இன்று அதிரடி கொல்கத்தாவை, விராட் கோலியின் ஆர்சிபி அணி சந்திக்கிறது. மோர்கனா, கோலியா என்று இந்தப் போட்டி பார்க்கப்பட்டு வருகிறது, அதோடு சென்னையுடன் மோத ஆர்சிபி இருந்தால் எளிதில் வீழ்த்தலாம் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் கனவு. ஏனெனில் கொல்கத்தா போட்டு சென்னையை புரட்டி எடுத்து விட்டால்?
ஐபிஎல் 2021 பிளே ஆப் சுற்று 2வது எலிமினேட்டரில் இன்று அதிரடி கொல்கத்தாவை, விராட் கோலியின் ஆர்சிபி அணி சந்திக்கிறது. மோர்கனா, கோலியா என்று இந்தப் போட்டி பார்க்கப்பட்டு வருகிறது, அதோடு சென்னையுடன் மோத ஆர்சிபி இருந்தால் எளிதில் வீழ்த்தலாம் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் கனவு. ஏனெனில் கொல்கத்தா போட்டு சென்னையை புரட்டி எடுத்து விட்டால்?
ஆனால் இந்த போட்டியில் வென்றாலும் அடுத்து டெல்லி கேப்பிடல்ஸுடன் அந்த அணி மோத வேண்டும். ஆனால் நிச்சயம் இந்தப் போட்டியில் வெல்லும் அணி டெல்லி கேப்பிடல்சையும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.
அதனால் இன்றைய போட்டியில் சென்னை ரசிகர்கள் விராட் கோலி தலைமை ஆர்சிபியையே ஆதரிப்பார்கள், மேலும் கொல்கத்தா கேப்டன் மோர்கன் அதனால் இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்காது, மேலும் கோலியா, தோனியா என்ற இறுதியில் தோனிதான் சிறப்பு என்று சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் ஹீரோவை நினைத்துப் புல்லரிக்க வேண்டும் எனவே இன்றைய ஆதரவு ஆர்சிபிக்கு அதிகம் இருக்கும். கோலி ரசிகர்களும் தோனி ரசிகர்களுக்கு ஈடு இணையானவர்கள், தல, தளபதி மாதிரி இந்த கோலி, தோனி ரசிகர்கள் பட்டாளம்.
ஆனால் கொல்கத்தா ஒரு அதிரடி அணி. வெங்கடேஷ் அய்யர், ஷுப்மன் கில், ஜெயசூரியா, கலுவிதரனா போல் ஆடுகின்றனர். ராகுல் திரிபாதி, அல்லது நிதிஷ் ரானா அந்த காலக்கட்டத்து இலங்கை போல் குருசிங்காவாக இருக்கலாம், ஆனால் மோர்கன் ரணதுங்கா போன்று ஆட மாட்டேன் என்கிறார். ஆர்சிபி பவுலிங்கை உடைத்தால் முடிந்தது கதை. பேட்டிங்கில் கோலி தானாகவே அவுட் ஆகி விடுவார், அந்த ஓப்பனர் படிக்கல்லுகு ஒரு பந்தை பாடிக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சராக ஏற்றினால் காலியாகிவிடுவார்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் டவுன் ஆர்டரை மாற்றி கோலியே அவரைக் காலி செய்து விட்டார், எனவே அவரை பொறுத்தமட்டில் எப்போது வேண்டுமானாலும் புலி சீறிப்பாயும், மேக்ஸ்வெல் செம பார்மில் இருக்கிறார், தொடக்கத்திலேயே மேக்ஸ்வெல் ரன் அடிக்க முடியாமல் கட்டுப்படுத்தினால் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறேன் என்று அவுட் ஆகும் வாய்ப்பு அதிகம்.
கொல்கத்தா பந்து வீச்சு அபாரமாக உள்ளது ஷிவம் மாவி, லாக்கி பெர்கூசன், இரண்டு புதிர் பௌலர்கள் வருண் மற்றும் சுனில் நரைன். கட்டுப்படுத்தும் ஷாகிப் அல் ஹசன் என்று பிரமாதமாக உள்ளது. அணியின் படி பார்த்தால் கொல்கத்தாதான் ஜெயிக்க வேண்டும், ஆனால் நாம் ஒன்று நினைக்கிறோம் உஷ் கண்டுக்காதீங்க என்ன நினைக்கிறதோ?
ஹெட் டு ஹெட்:
மொத்தம் 28 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 13 முறைதான் வென்றுள்ளது கொல்கத்தா 15 முறை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது, இதே தொடரில் அபுதாபியில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபியை பந்தாடியது கொல்கத்தா. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோலி படையை ஊதியது கொல்கத்தா.
அணி விவரம்:
ஆர்சிபி- விராட் கோலி, படிக்கல், ஸ்ரீகர் பரத், டேனியல் கிறிஸ்டியன், கிளென் மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமட், ஹர்ஷல் படேல், சிராஜ், சஹல், கார்ட்டன்
கொல்கத்தா: வெங்கடேஷ் அய்யர், ஷுப்மன் கில், திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லாக்கி பெர்கூசன், ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி.