சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி ‘மாவீரன்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர், மோனிஷா பிளசி. ‘சுழல் 2’ வெப் சீரீஸைத் தொடர்ந்து தற்போது ‘கூலி’, ‘ஜனநாயகன்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்:
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? – காலை நேரத்தில் படப்பிடிப்பு நடந்தால் சூரியனையும் சேர்த்துப் பார்ப்பேன். மற்றபடி ‘லேட்’டாக எழுறதுதான் வழக்கம்!