பத்திரிகையாளர் சாவி நடத்திய ‘சாவி’ வார இதழ், பல புதுமைகளுக்குக்களமாக இருந்தது. வாசகர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் விழா நடத்தியது அவற்றில் ஒன்று. இப்படிப் பல செய்திகளை நினைவுகூரும்வகையில் ‘குடும்ப நாவல்’ இதழ், சாவி சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.
சாவியின் நிர்வாகத் திறன், சமூக அக்கறை, பயண அனுபவங்கள், அவர் காந்தியடிகள் மீது கொண்ட அன்பு, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், மு. கருணாநிதி போன்றோர் உடனான உறவு என அவரது வாழ்க்கையின் முக்கியத் தருணங்கள் இதழில் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார், ஓவியர் ஜெயராஜ் போன்றவர்களின் நெகிழ்ச்சியான நினைவு கூரல்கள் கூடுதல் சிறப்பு. – ஆனந்தன் செல்லையா