Site icon Metro People

உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலின் போது, கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய கட்சிகள் வலியுறுத் தியுள்ளன.

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலா ளர் சுந்தரவல்லி மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக, பாஜக, காங்கி ரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை யில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தலின் போது வரலாறு காணாத அள வுக்கு வன்முறை நடைபெற்றதாகக் கூறினார். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை சுதந்திரமான முறையிலும் நேர்மையான முறையிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தி யதாகத் தெரிவித்தார்.

Exit mobile version