Author: Subash R (Subash R)

Home Subash R
Post

சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த...

Post

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது....

Post

டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப்...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி
Post

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி

2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள்...