15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள்...
Author: Vinoth Kumar U (Vinoth Kumar U)
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின்...
குருவாயூர் கோயில் தேவஸ்தானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி
குருவாயூர் கோயில் தேவஸ்தானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடையை பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானம் கட்டும் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கினார். குருவாயூர் கோயிலுக்கு சென்ற முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் வரவேற்பு அளித்தார். பின்னர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுவரும் பன்நோக்கு மருத்துவமனையின் கட்டுமான பணிக்காக 15 கோடி ரூபாயை...
உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.8260 கோடியில் வளர்ச்சி திட்டம்
உத்தராகண்ட்டில் ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் உத்தராகண்ட் மாநிலத்தின் 25வது ஆண்டு நிறுவன விழாவில், ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.நவம்பர் 9ம் தேதி 2000ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர்...
தனது உயிருக்கு அச்சுறுத்தல்: தேஜ் பிரதாப் குற்றச்சாட்டு
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். கட்சியின் விதிகளை மீறியதன் காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் தேஜ் பிரதாப்புடனான அனைத்து குடும்ப...




