ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையைப் படைத்தது. உலகம் முழுவதும் 280 கோடி அமரெிக்க டாலர்களை வசூல் செய்தது இத்திரைப்படம். படத்தில் இடம்பெற்ற கிராஃபிக் காட்சிகள் வேறு உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றிருந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 160 மொழியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான கிராஃபிக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.