அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பாரா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. மேலும், இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் மீதம் இருக்கிறது. இதனிடையே, தனது அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியிருக்கிறார் சிரஞ்சீவி.
அனில் ரவிப்புடி இயக்கவுள்ள இப்படத்தின் பூஜை, உகாதி பண்டிகையை ஒட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு முன்னணி இயக்குநர்கள் மற்றும் வெங்கடேஷ் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றி பெற்றவர் அனில் ரவிப்புடி. குறிப்பாக, இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்தூனாம்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஓடிடி என அனைத்திலுமே சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.