பீகாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைய உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5,...
Category: அரசியல்
தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நடத்தினார். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன்...
பீகார் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தானே ஏற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாட்னாவில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர்...
குடும்ப பிரச்சனையை நான் தீர்த்துக் கொள்வேன்: கட்சியினருக்கு அறிவுறுத்திய லாலு பிரசாத் யாதவ்
குடும்ப பிரச்னையை வீட்டுக்குள் நான் தீர்த்துவிடுவேன், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்களுக்கு லாலு பிரசாத் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பீகார் தேர்தலில் போட்டியிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இந்தக் கூட்டத்தில், லாலு பிரசாத் யாதவ், மனைவி ராஃப்ரி தேவி மற்றும்...
டெல்லி குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : அல் ஃபலா பல்கலைக்கழகம் அறிவிப்பு
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி...
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது: அண்ணாமலை கண்டனம்
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும். அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர். வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இந்து...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு அளித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில்...
டெல்லியில் வெடித்து சிதறிய கார்: 10 பேர் பலி | முக்கிய நகரங்களுக்கு அலர்ட்..!
தலைநகர் டெல்லியில் கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 10பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில்,...
தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு: 8பேர் உயிரிழப்பு
தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாநில எல்லோயோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து...
உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.8260 கோடியில் வளர்ச்சி திட்டம்
உத்தராகண்ட்டில் ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் உத்தராகண்ட் மாநிலத்தின் 25வது ஆண்டு நிறுவன விழாவில், ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.நவம்பர் 9ம் தேதி 2000ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர்...





