கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ‘காங்கிரஸ் உயர் தலைமை அழைத்தால் டெல்லிக்குச் செல்வேன்’ என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்று நவம்பர் 20 அன்று தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முதல் பாதியை கடந்தது. ஆட்சியின் முதல் இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் டி.கே.சிவகுமார் முதல்வராகவும் இருப்பார்கள் என பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவரின்...
Category: இந்தியா
மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆதரவாக முழக்கம்: ஜே.என்.யூ மாணவர் சங்கம் மறுப்பு
டெல்லி காற்று மாசு போராட்டம் தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) நேற்று முன்தினம் மறுத்தது.வழக்கில் போலியான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கேட் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டப்பட்ட நிலையில், அப்பகுதியிலிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர்....
இந்தியா-கனடா யுரேனியம் ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்
இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும்...
மத்திய அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாதது ஏன்?: மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் சர்ச்சை பதில்
முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார். கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார். மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்? காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து...
சபரிமலை தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம்...
அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி: சௌரவ் கோகோய் குற்றச்சாட்டு
அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக அஸ்ஸாம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் குற்றஞ்சாட்டியுள்ளார். பீகாரைத் தொடர்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த...
பண மோசடி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜர்
பண மோசடி முதலீட்டு வழக்குகள் தொடர்பாக ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆஜரானார். ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பண மோசடி ஒப்பந்தங்களில் முதன்மை குற்றவாளியாக 11 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை எதிரக்கொண்டுள்ளார். நவம்பர் 21ஆம் தேதிக்குள் ஜெகன்மோகன் ரெட்டி விசாரணையில் கலந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன்...
காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் மேற்கொண்ட பிரசாந்த் கிஷோர்
சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று பீகாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மெளன விரதம் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹார் முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 26 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் இன்று பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருந்தார். பீகார் சட்டப்பேரவை...
பிஎல்ஓ அலவலர்கள் தற்கொலை: தேர்தல் ஆணையத்தை சாடிய மம்தா பானர்ஜி
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து...
டெல்லியில் நிகழ்த்தப்பட்து பயங்கரவாத தாக்குதல் தான்: அசாதுதீன் ஒவைசி
டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். கடந்த நவ.,10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே டாக்டர் உமர் நபி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்,...