Site icon Metro People

சென்னை அண்ணா பல்கலை.யில் கரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் மூன்று மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ததில், 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் மூன்று மாணவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், இன்று வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், அவர்கள் வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version