தென்னிந்தியாவின் பெரிய ரியல்எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் இதுவரை 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக கையகப்படுத்தி எந்த சட்டச்சிக்கலும் ஏற்படாத வகையில்வழங்கியுள்ளது. பல பெரிய நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
இந்நிறுவனம் தனது நிறுவனத்தின் பெயரை சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் மேலும் பிரபலமடையச் செய்யும் நோக்கத்துடனும், நாடு முழுவதும்தனது தொழிலை விரிவுபடுத்தவும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியைவிளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
இதுகுறித்து ஜி ஸ்கோயர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி என்.ஈஷ்வர் கூறும்போது, “மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான தோனியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எங்கள் தொழிலை நாடுமுழுவதும் வளர்த்தெடுக்க உதவும்” என்றார்.
இதுகுறித்து தோனி கூறும்போது, “ரியல் எஸ்டேட் துறையில்நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னை மற்றும் இங்குள்ளமக்களுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. எனவே சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்காகச் செயல்படுவது அளவற்றமகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது முன்மொழிவை ‘உங்கள் நிலம், உங்கள் வீடு, உங்கள் வழி’ என மாற்றியுள்ளது. சென்னையில் தோனி பங்கேற்ற நிறுவனத்தின் விளம்பரப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இது விரைவில்வெளியாகும்.
இவ்வாறு ஜி ஸ்கொயர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.