Site icon Metro People

அன்புக்குரிய கதாநாயகர் விஜயகாந்த் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தேமுதிக தலைவர் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருதுக்கு விஜயகாந்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், “தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், கனிமொழி எம்.பி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக, தொண்டர்கள் யாரும் பிறந்தநாளில் நேரில் வர வேண்டாம் எனவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாட வேண்டும் எனவும், விஜயகாந்த் அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.

மேலும், விரைவில் உடல்நலப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version