Site icon Metro People

‘அன்பறிவு’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘அன்பறிவு’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ள படம் ‘அன்பறிவு’. இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் தமிழா ஆதியே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் நேரடி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (18.12.21) ‘அன்பறிவு’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

Exit mobile version