Site icon Metro People

9 வாக்குகள் வித்தியாசத்தில் ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை கைப்பற்றிய திமுக

மறைமுகத் தேர்தலில் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சத்யா ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார்.

ஓசூர் மேயர் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ சத்யாவும் அதிமுக சார்பில் நாராயணன் போட்டியிட்டனர். 45 உறுப்பினர்களுக்கும் மூன்று மொழிகளில் வாக்கு சீட்டு வழங்கப்பட்டு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில் வார்டு வரிசைப்படி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சத்யாவுக்கு 27 வாக்குகள் பதிவானது. அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.நாராயணன் 18 வாக்குகள் பெற்றார் . 27 வாக்குகள் பெற்ற எஸ்.ஏ சத்யா வெற்றி பெற்றதாக மாநகராட்சி ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அங்கி அணிந்து செங்கோல் ஏந்தி எஸ்.ஏ சத்யா மேயராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் எம்எல்ஏ பிரகாஷ் கலந்து கொண்டு ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்ற எஸ்.ஏ சத்யாவை வாழ்த்தினார்.

Exit mobile version