ஆய்வாளர், பேராசிரியர், பெண்ணியவாதி, நாடகக் கலைஞர், நாடகாசிரியர், நெறியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல அடையாளங்கள் இருந்தாலும் ‘அரங்கச் செயல்பாட்டாளர்’ என்று அழைக்கப் படுவதையே விரும்புபவர் அ.மங்கை. இந்தியாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவர், நாடகம், மொழிபெயர்ப்பு, பாலினச் சமத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்தமைக்காகத் தேசிய அளவிலும், உலக அளவிலும் பெரிதும் மதிக்கப்படுகிறார். அவருடைய நேர்காணல்:
ஆங்கில இலக்கியப் பேராசிரியரான நீங்கள், நாடகக் கலைஞராக எப்படி உருவானீர்கள்? – மகளிர் இயக்கம் சார்ந்த ஜனநாயக உணர்வுதான் மக்களிடம் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை என்னிடம் ஏற்படுத்தியது. எழுத்து, பத்திரிகை, மொழிபெயர்ப்பு போன்ற