Site icon Metro People

பொருளாதார நெருக்கடி: இத்தாலி பிரதமர் பதவி விலகல்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மரியா டிராகிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனைக் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

அதேவேளையில், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது ராஜினாமாவை அதிபர் மாளிகையில் அளித்ததாகவும், அதனை ஏற்றுகொண்டதாகவும் இத்தாலி அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா அறிவித்திருக்கிறார்.

ராஜினாமா குறித்து டிராகி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தக் காலக்கட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி. நான் எனது ராஜினாமாவை அதிபரிடம் அளித்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version