லக்னோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று கூறியதாவது: ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருக்கு, ஸ்ட்ரோமங்டேலுங் என்ற படை இருந்தது. இது ஹிட்லரின் ரகசிய படையாக செயல்பட்டது. ஹிட்லர் காலத்தில் நடந்த சம்பவங்கள் தற்போது உ.பி.யில் நடைபெற்று வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சென்றுவிட்டு லக்னோ திரும்பும்போதெல்லாம் கொலை நடைபெறுகிறது.
இதன் பின்னணியில் கோரக்பூரை சேர்ந்த ரகசிய படை இருக்கிறது. இது பாஜகவின் ரகசிய படை ஆகும். கர்னிசேனா போன்ற அமைப்புகளுக்கு முதல்வர் யோகி பகிரங்கமாக ஆதரவு அளிக்கிறார். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.