யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 6.30 மணிக்கு அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுவது இது 8-வது முறையாகும். 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு இம்முறை யாஷ் துல் கேப்டனாக உள்ளார்.
இங்கிலாந்து அணி கடைசியாக 1998ம் ஆண்டு பட்டம் வென்றிருந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மகுடம் சூடும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியை போன்றே இங்கிலாந்து அணியும் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் இந்தத் தொடரில் 73 சராசரியுடன் 292 ரன்கள் குவித்துள்ளார்.