ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார்.
மற்றொரு தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறவே, அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் கடைசியாக இறங்கிய ஷஷாங்க் சிங் 52, மார்கோ ஜென்சென் 34 ரன்கள் எடுத்து அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.
ஃபீல்டிங்கை பொறுத்தவரை சிஎஸ்கே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐந்து முறைக்கு மேல் கேட்சுகளை தவறவிட்டு சொதப்பினர். கலீல் அஹமது, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள், முகேஷ் சவுத்ரி, நூர் அஹமது தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்திரா, கான்வே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நின்று ஆடினர். இதில் ரச்சின் 23 ரன்களில் 36 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஆடிய கான்வே 69 ரன்கள் குவித்து 17 ஓவர் வரை அடித்து ஆடினார்.
3வதாக இறங்கிய கேப்டன் ருதுராஜ் ஒரே ரன்னில் வெளியேற அடுத்ததாக களத்துக்கு வந்த ஷிவம் துபே 42 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய தோனி 3 சிக்சர்கள், 1 ஃபோர் என 27 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் யுவேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜடேஜா 9 ரன்கள், விஜய் ஷங்கர் 2 ரன்கள் 20 ஓவர் முடிவில் 201 ரன் எடுத்து சிஎஸ்கே தோல்வியை தழுவியது. கடந்த மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணிக்கு இது 4வது தோல்வியாகும். தற்போதைய நிலவரப்படி புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளுடன் சிஎஸ்கே 9வது இடத்தில் நீடிக்கிறது.