தங்களது வேலை நேரத்தை உறுதிசெய்வதை வலியுறுத்தியும், தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளித்திருப்பதை கர்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) ஊழியர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் 14 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பணிபுரிய நிர்ப்பந்திப்பதால் தங்களது வாழ்க்கை – வேலை சமநிலை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, எல் அண்டு டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் போன்றோர் ஊழியர்கள் வாரத்துக்கு 70, 90 மணி நேரம் வேலைசெய்யலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்ததன் பின்னணியில், கர்நாடக மாநில ஐ.டி. – ஐ.டி.இ.எஸ். ஊழியர் சங்கத்தினரின் போராட்டம் கவனிக்கத்தக்கது.