சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
> மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு நுண்கடன் வழங்கிட ஏதுவாக 25 கோடி ரூபாய் மூலதனத்தில் ‘அலைகள்’ திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும்
> காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமங்கள் 32 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
> மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள் 45 கோடி ரூபாய் செலவில் “பசுமை மீன்பிடி துறைமுகங்களாக” மேம்படுத்தப்படும்.
> நாட்டின மீன் இனங்களை பெருக்கி பாதுகாத்திட 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படும் .
> தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கிட, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தினால் “கயல்” திட்டம் தொடங்கப்படும்.
> பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடித்திறனை மேம்படுத்திடும் வகையில் 2,000 வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் வாங்கிட 10 கோடியே 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
> திருவள்ளூர் மாவட்டம், அவுரிவாக்கம் கீழ்குப்பம் மற்றும் வல்லம்பேடுகுப்பம் கிராமங்களில் புதிய மீன் இறங்குதளங்கள் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
> செங்கல்பட்டு சதுரங்கப்பட்டினம் மீனவ கிராமத்தில் புதிய மீன் இறங்குதளம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
> செயற்கை முறை கருவூட்டல் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலகுகளில் உறைவிந்து சேமிப்பு மற்றும் விநியோகத்திற்குத் தளவாடப் பொருட்கள் கொள்முதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் 13. 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்
> மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
> கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் 11 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
> மீன்கள் மற்றும் மீன் உணவுப் பொருட்களின் இருப்பு விவரம், விலை, மற்றும் சந்தை நிலவரம் ஆகிய தகவல்களை பயனீட்டாளர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக “இ-மீன்” வலைதள சேவை 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
> மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தில் 4 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
> தீவிர மீன் வளர்ப்பு முறையில் நீர்த்தேக்கங்களில் மிதவைக் கூண்டுகள் அமைத்து மீன் உற்பத்தியை அதிகரித்திடும் திட்டம் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செயல்படுத்தப்படும் செலவில் செயல்படுத்தப்படும்.
> திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
> அலங்கார மீன் சந்தைப்படுத்துதலை உற்பத்தி மற்றும் மேம்படுத்திட அலங்கார மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
> தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மீன்வள கண்காட்சிகள் 74 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
> சாத்தனூர், மஞ்சளாறு, வைகை அணை, அகரம் உள்ளிட்ட அனைத்து அரசு மீன் விதைப்பண்ணைகள் 6 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
> நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் மீன்பிடிப்பினை மாற்று முறை ஊக்குவித்திட 200 நாட்டுப்படகு மீனவர்களுக்கு கணவாய் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
> நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் 18 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
> புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் கிராமங்களில் மீன் இறங்குதளங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
> மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும்.
> மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர், மீன்வளத்தில் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
> மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில், நவீன தொழில்நுட்பங்களை கொள்ளும் அறிந்து நோக்கில், துறை அலுவலர்களுக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
> தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை மற்றும் அண்ணா காலனி மீனவ கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
> தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் டீசல் விநியோக நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, “நிகழ்நேர மேலாண்மை அமைப்பு” 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
> மீனவர்களுக்கு மீன்பிடி துறைமுக வளாகத்தில் டீசல் வழங்கிட ஏதுவாக தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக மூன்று டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
> அரசு மற்றும் பண்ணைகளுக்கு தீவனத்தை தனியார் மீன் STLDITOUT மீன் விநியோகிப்பதற்காக மீன் தீவன உற்பத்தி ஆலை தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
> சென்னை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் “மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள்” 45 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக நிறுவப்படும்.
> மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் மின்னனு பணப் பரிவர்த்தனை வசதி 25 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
> மாநிலத்தின் மீன் உற்பத்திக்கு வலுசேர்க்கும் தமிழகத்துக்கென ஒரு வகையில், மீன் வகையினை மாநில மீனாக அடையாளம் கண்டு, அதன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டிற்கான திட்டம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
> புதிய மீன் இனங்களை மீன் வளர்ப்போரிடையே அறிமுகப்படுத்தி உற்பத்தியை பெருக்கும் விதமாக பாகு மீன் மற்றும் கொடுவா மீன் குஞ்சு உற்பத்தி மையங்கள் முறையே கிருஷ்ணகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
> சென்னை, மாதவரம், மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி உட்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்தப்படும்
> தமிழ்நாடு மீன்வள தொழில்முனைவோர் மாணவர்கள், பயன்பெறும் வகையில் தேசிய அளவிலான மீன்வள புத்தாக்கம் மற்றும் புத்தொழில் மாநாடு தொழில் துறை வல்லுநர்களின் பங்கேற்போடு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
> மீன்வளம் சார்ந்த அனைத்து தொழில் முனைவோருக்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வழிகாட்டிட எதுவாக “மீன்வள தொழில்நுட்ப ஆலோசனை, மேம்பாடு மற்றும் மேலாண்மைக் அமைக்கப்படும் குழு” அமைக்கப்படும்.
> சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கடலோர மீனவ கிராமங்களில், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள விரிவான தொழில்நுட்ப சாத்தியகூறுகளை ஆய்வு செய்திட ஏதுவாக 5 கோடி ரூபாய் “சுழல் நிதி” உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.