இந்தி நடிகர் ஆமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய இந்திப் படம், ‘லாபதா லேடீஸ் இதில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ், சாயா கதம், ரவி கிஷன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 1-ம் தேதி வெளியானது. புதுமணத் தம்பதிகள் ஒரே ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்கள். இரண்டு மணமகனும் ஒரே நிற கோட் சூட் அணிந்திருக்கிறார்கள். புதுமணப் பெண்களும் ஒரே நிற உடையுடன் முக்காடு போட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜோடி மாறி சென்றுவிட பிறகு நடக்கும் குழப்பங்களும் சிக்கல்களும்தான் இதன் கதை.
இந்தப் படம் இந்தியா சார்பில், சிறந்த வெளி நாட்டுப் படப்பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந் துரைக்கப்பட்டது. ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலை மில் இது, ஃபேப்ரிஸ் பிராக் இயக்கிய புர்கா சிட்டி’ என்ற அரேபிய குறும்படத்தின் தழுவல் என்று சர்ச்சை எழுந்தது. இந்த 19 நிமிட குறும்படத்தில் புர்கா அணிந்திருப்பதால் மனைவிகள் மாறிவிடுவதுதான் கதை இரண்டு படங்களுமே தீவிர ஆணாதிக்கச் சிந்தனை, பாலின அடிப்படையிலான கட்டுப்பாடுகள், சமூக விதிமுறைகள், பெண்களின் அடையாள இழப்பு ஆகியவற்றை விமர்சிக்கிறது. புர்கா சிட்டி’ படத்தில் காண்பிக்கப்பட்ட புர்காவுக்கு பதில் இந்திப் படத்தில் முக்காடு என்று மாற்றி அமைத்து அப்பட்டமாகக் காப்பியடித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் அந்தக் காட்சி களை வீடியோவாக வெளியிட்டு விமர்சித் திருந்தனர்
இதை லாபதா லேடீஸ்’ படத்தின் கதாசிரியர் பிப்லாப் கோஸ்வாமி மறுத்துள்ளார். ‘இந்தக் கதையின் விரிவான சுருக்கத்தை, திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் 2014-ம் ஆண்டே பதிவு செய்துவிட்டேன். 2018-ம் ஆண்டு டூ பிரைட்ஸ் என்ற தலைப்பில் முழு நீள ஸ்கிரிப்டையும் பதிவு செய்தேன். சில காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு, கதையைக் காப்பி அடித்த தாக எப்படிக் கூற முடியும்? இது 100 சதவீதம் ஒரிஜினல் கதை” என்று தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் ‘லாபதா லேடீஸ் படத்தைப் பார்த்த ‘புர்கா சிட்டி’ இயக்குநர் ஃபேப்ரிஸ் பிராக் கூறும்போது, “லாபதா லேடீஸ் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு, எனது குறும்படத்துடன் அந்தப் படம் நெருக்கமாகப் பொருந்தியது ஆச்சரியமாக இருந்தது.
பின்னர் நான் அந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கதை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றதாக இருந்தபோதிலும், எனது குறும்படத்தின் பல அம்சங்கள் தெளிவாக இதிலும் இருந்தன என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள போலீஸ் தொடர்பான காட்சிகளை அவர் பாராட்டியுள்ளார்.