புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடிகை தபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை தபு, முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தபு கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான ‘அல வைகுந்தபுரமுலோ’ தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.