Site icon Metro People

சற்று ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
உலகில் சக்தி வாய்ந்த நாடாக வலம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர்தொடுத்து வருகிறது. இந்த போர் பதற்றம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக விலைமதிப்புமிக்க ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இம்மாதம் முதல் தேதியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இது வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் மறுநாளே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. பிறகு ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று அதிரடியாகக் குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.4,715-க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நீண்ட நாட்களாக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 80- ரூபாய் உயர்ந்து, மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் சவரனுக்கு ரூ.38,200-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.4,755-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,300-க்கும் விற்பனையாகி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Exit mobile version