போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் செயல், உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்விவகாரத்தில், சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. 2023 அக்டோபர் 7இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல், பல தசாப்தங்களாகத் தொடரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இன்னும் மோசமான நிலையை அடையக் காரணமாகிவிட்டது.
பதிலடி என்கிற பெயரில் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 61,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 70%க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்திருக்கின்றன.