Site icon Metro People

பெண்களுக்கு தமிழக அரசின் ரூ.50,000 வரைக்கான உதவித்தொகை திட்டம்.! புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை திட்டம் கிடைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படுவது தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல பட்டப்படிப்புக்கு கீழ் கல்வித் தகுதி பெற்ற பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.. திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே பெற்றோர், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் திருமணம் முடிந்ததும் பதிவு சான்றிதழுடன் விண்ணப்பித்தால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.

புதிய நெறிமுறைகள்;

குடும்பத்தில்‌ எவரேனும்‌ அரசு பணியில்‌ இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது திருமண நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெற்றுள்ளாரா என்பதை கள ஆய்வு செய்து உண்மை என தெரியவரின்‌ இதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவித்து விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும்‌.

விண்ணப்பிக்கும்‌ மனுவில்‌ இணைக்கப்பட்டுள்ள மணமகன்‌ மற்றும்‌ மணமகளுக்காக பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு சான்றிதழில்‌ பிறந்த தேதி சரியாக உள்ளதா என ஆய்வு செய்து மணமகளுக்கு 18 மணமகனுக்கு 21 உள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய வயது இல்லை என தெரியவரின்‌ இதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவித்து விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும்‌.

மனுதாரரால்‌ இணையவழி மூலமாக பட்டப்படிப்பு படித்து வருவதற்கான சான்றிதழ்கள்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது என அறிய வந்தால்‌, உடனடியாக மனுதாரருக்கு தகவல்‌ தெரிவித்து பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை பெற்று ஏற்கனவே பதிவேற்றம்‌ செய்துள்ள விண்ணப்பதுடன்‌ இணைத்திட அறிவுறுத்தப்படுகிறது.

குடும்பத்தில்‌ எவரேனும்‌ அரசு பணியில்‌ இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது திருமண நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெற்றுள்ளாரா என்பதை கள ஆய்வு செய்து உண்மை என தெரியவரின்‌ இதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவித்து விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும்‌.

விண்ணப்பிக்கும்‌ மனுதாரர்‌ மாடி வீடு , நான்கு சக்கர வாகனங்கள்‌ உள்ளிட்ட உயர்தர வாழ்க்கை நடத்துபவர்‌ என தெரியவரும்‌ பட்சத்தில்‌ இவ்விவரங்களை குறிப்பிட்டு மனுவினை தள்ளுபடி செய்திட வேண்டும்‌. திருமண மண்டபங்களில்‌ நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை கோரி விண்ணப்பித்திருப்பது கள ஆய்வில்‌ தெரியவரும்‌ பட்சத்தில்‌ இம்மனுதாரருக்கான விண்ணப்பத்தினை உடனடியாக தள்ளுபடி செய்திட வேண்டும்‌.

Exit mobile version