Site icon Metro People

120 கோடியை நெருங்கும் கோவிட்-19 தடுப்பூசி

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 119.38 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 119.38 கோடியைக் (1,19,38,44,741) கடந்தது. 1,23,73,056 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,264 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,67,962 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.33 சதவீதமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 151 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,09,940 ஆக உள்ளது. நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.32 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 11,50,538 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 63.59 கோடி கொவிட் பரிசோதனைகள் (63,59,24,763) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 62 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.90 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.79 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 86 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 52 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

Exit mobile version