Site icon Metro People

அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில்‌ உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலைப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.org, www.tngasapg.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள்‌ மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ – ரூ.58.
பதிவுக்‌ கட்டணம்‌ – ரூ.2.
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை
பதிவுக்‌ கட்டணம்‌ – ரூ.2 மட்டும்‌.

விண்ணப்பம்‌ மற்றுப்‌ பதிவுக்‌ கட்டணம்‌

விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card/ Credit Card/ Net Banking மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.

இணையதளம் வாயிலாகக்‌ கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில், ‌”The Director, Directorate of Collegiate Education, Chennai என்ற பெயரில்‌ 23/06/2021 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ தொடங்கும்‌ நாள்‌- 23.08.2021
இணையதளம் வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்- 01.09.2021

Exit mobile version