Site icon Metro People

கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 52.56 கோடியை கடந்தது

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 52.56 கோடி கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூறியுள்ளதாவது:

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 52.56 கோடிக்கும் அதிகமான (52,56,35,710) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 48,43,100 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

இவற்றில், இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 51,09,58,562 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 2.07 கோடி (2,07,55,852) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version