சென்னை: அண்மையில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விற்பனை ஏப்ரல் 16 முதல் இந்திய சந்தையில் தொடங்கி உள்ளது. அமேசான், எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் சில்லறை வர்த்தக பிரிவில் இந்த போனை பெறலாம். சிறப்பு அம்சங்கள்:
- 6.88 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம்
- ஆக்டா-கோர் Unisoc டி7250 ப்ராசஸர்
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
- 5200mAh பேட்டரி
- 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 3ஜிபி / 4ஜிபி ரேம்
- 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.6,499 முதல் தொடங்குகிறது