Site icon Metro People

தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு!: சென்னையில் நீட் மாதிரி தேர்வு இணையதளம் தொடக்கம்..!!

சென்னை: தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் பயிற்சிபெறும் வகையில் நீட் மாதிரி தேர்வு எழுதும் இணையதளம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத இந்த ஆண்டு 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் பயிற்சிபெறும் வகையில் நீட் மாதிரி தேர்வு எழுதும் இணையதளம் வெளியிடப்பட்டது.

www.QUESTIONCLOUD.IN இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்களது சுய விவரம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவிடவேண்டும். பின்னர் திரையில் மாதிரி வினாத்தாள் தோன்றியவுடன் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம். நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இணையதளத்தை உருவாக்கியுள்ள புளு சிலிகான் இன்போடெக் நிறுவனத்தின் தலைவர் முனைவர் அகிலன் ராமநாதன் தெரிவித்துள்ளார். மாதிரி தேர்வு மதிப்பெண்கள் மின்னஞ்சல் மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. நீட் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version