சென்னை: தமிழக அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதற்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2)-ன் படி, தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதன்படி, 2023 மார்ச் 31-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதற்காக நேற்று ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.