பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிபிஎப் கணக்குகளில் வாரசுதாரரை சேர்க்கவும் புதுப்பிக்கவும் நிதி நிறுவனங்கள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2018-ம் ஆண்டு அரசு சேமிப்பு மேம்பாடு பொது விதிகளில் தேவையான மாற்றங்கள் செய்து ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், லாக்கர்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்களுக்கான வாரிசுதாரர்களாக 4 பேர் வரை சேர்க்க அனுமதிக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.