Site icon Metro People

நீலகிரி கனமழை: பாண்டியர் புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பாண்டியர் புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகப்படியாக பந்தலூர் பகுதியில் 87 மில்லி மீட்டர் மழை பெய்ததால் இரும்பு பாலம் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

கூடலூர் செல்லும் சாலையில் விழுந்த மரத்தை பொதுமக்களின் உதவியுடன் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூடலூர் பாண்டியர் புன்னம்புழா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version