Site icon Metro People

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி: மென்பொறியாளராகவும் ஆக்குகிறது ‘சோஹோ’ கல்வி நிறுவனம்

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிப் பதுடன், மென்பொறியாளர்களாகவும் ஆக்குகிறது “சோஹோ” கல்வி நிறுவனம்.

ஏராளமானோரின் வேலையின் மைக்கு வேலைக்குத் தேவையான திறன்கள் இல்லாததே காரணம். இந்த குறையைப் போக்குகிறது பிரபல மென்பொருள் நிறுவனமான ‘சோஹோ’. இந்நிறுவனத்தின் கல்வி நிறுவனம், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ முடித்த மாணவர்கள், மென்பொறியாளராவதற்கு தேவையான திறன்களை வழங்குகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும்போது ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக சோஹோ கல்வி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி கூறியதாவது: “அனைவராலும் பொறியியல் பட்டப் படிப்புக்கான செலவு செய்ய இயலாது. எனவேதான், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லாஞ்சேரி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் ‘சோஹோ’ கல்வி நிறுவனங்களை தொடங்கினோம். இங்கு, மென்பொறி யாளர்களை உருவாக்க ‘சோஹோ ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’, வரைகலை நிபுணர்களை உருவாக்க’ ஸ்கூல் ஆஃப் டிசைன்’, சந்தைப்படுத்துதல், விற்பனை பிரிவில் திற மையானவர்களை உருவாக்க ‘ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று பிரிவுகளில் இரண்டை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு ‘ஸ்கூல்ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி’ செயல் பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இங்கு சேர, பத்தாம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு அல்லது பிளஸ் 2 முடித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் (17 வயது முதல் 20 வயது வரைஉள்ளவர்கள் மட்டும்) விண்ணப்பிக் கலாம்.

கணித அடிப்படையில்: நுழைவுத்தேர்வு, நேர்காணலுக்கு பிறகு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பத்தாம் வகுப்பு கணிதத்தின் அடிப்படையில் இந்த தேர்வு இருக்கும். சென்னை, தென்காசியில் இந்தத் தேர்வு நடைபெறும். சோஹோ கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளத்தில் தற்போதுவிண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15 மற்றும் டிசம்பர் 17-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும். தேர்வானவர்களுக்கான 2023 ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி தொடங்கும்”.

Exit mobile version