நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது.

செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகை அபிநாயா.

தனது திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார் அபிநயா. அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ’ஈசன்’, ‘7-ம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தாக்க தாக்க’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜுக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி, ஓடிடியிலும் கவனம் பெற்றுள்ள ‘பணி’ (Pani) படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்புத் திறனும் வெகுவாக பேசப்பட்டது.

இந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரான கார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும் ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.