Site icon Metro People

தக்காளி வரத்து அதிகரிப்பால் குப்பையில் கொட்டப்படும் அவலம்

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி ஜூன் மாதத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. வடக்கிபாளையம், சூலக்கல், நெகமம், முத்தூர் பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை பணி செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.  வடகிழக்கு பருவமழை பல நாட்கள் தொடர்ந்து பெய்ததால், சில கிராமங்களில் செடியிலேயே பழுத்த தக்காளிகள் தரையில் விழுந்து அழுக துவங்கியது.

தற்போது மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து வழக்கத்தைவிட அதிகமானது.தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.10க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பு வழக்கத்தைவிட அதிமாவதால், விலை கட்டுபடியாகாமல் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Exit mobile version