Site icon Metro People

பள்ளிகள் திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார்.


கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பெற்றோர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைக்கு பிறகு நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version