டோக்கியோ நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான ஹாக்கி லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 0-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
இந்திய அணி தரப்பில் ரூபேந்திர சிங் பால் இரு கோல்களும், சிம்ரன்ஜீத் சிங் ஒரு கோலும் அடித்தனர். ஒலிம்பிக்கில் 2-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன் நியூஸிலாந்து அணியை வென்ற இந்திய அணி, தற்போது ஸ்பெயின் அணியைச் சாய்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-7 என்ற கோல்கணக்கில் தோற்ற இந்திய அணி மீண்டெழுந்துள்ளது.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஸ்பெயின், இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக பந்தைக் கடத்தினர். 4-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப் அடித்த ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் பிரான்சிஸ்கோ தடுத்தார். 12-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஸ்பெயி்ன் வீரர்கள் வீணாக்கினர்.
ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இ்ந்திய வீரர் சிம்ரன் ஜித்சிங் அருமையாக கோல் அடித்து அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். அடுத்த நிமிடத்தில் இந்திய வீரர் ரூபேந்திரபால் சிங் கோல் அடிக்க இந்திய அணிக்கு 2-வது கோல் கிடைத்தது.
முதல்காலிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.
2-வது காலிறுதியில் ஆட்டத்தின் 24 நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கும், 30-வது நிமிடத்தில் இந்திய அணிக்கும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். இதனால்2-வது பாதியிலும் இந்திய அணியே முன்னிலைபெற்றது.
3-வது காலிறுதியிலும் ஸ்பெயின் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பை மிட்பீல்டர் விசன் ரூயிஸ் வீணடித்தார். இந்திய அணியின் ஆதிக்கம் அதிகரித்தவுடன், ஸ்பெயின் வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தினர். இதனால் 3-வது காலிறுதியில் இரு கோல்வாய்ப்புகளை இ்ந்திய வீரர்கள் தடுத்தனர்.
4-வது மற்றும் கடைசிக் காலிறுதியில் 50-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பையும் இந்திய அணி தடுத்துவிட்டது. ஸ்பெயின் வீரர் லியானார்டோ அடித்த பந்தை, இந்திய வீரர் சுரேந்திர குமார் தடுத்துவிட்டார்.
51-வது நிமிடத்தில் இந்திய வீரர் ரூபேந்திர பால்சிங் தன்னுடைய 2-வது கோலையும், அணிக்கு 3-வது கோலையும் பெற்றுக்கொடுத்து 3-0 என்ற கணக்கில் முன்னிைலப்படுத்தினார். ஆட்டத்தின் இறுதிவரை ஸ்பெயின் அணியால்கோல் அடிக்க முடியாததால், 0-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.