இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள்: 58 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:;
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 58 கோடியைக் கடந்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 64,39,411 முகாம்களில் 58,14,89,377 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 52,23,612 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 38,487 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,16,36,469 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 2020, மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகவும் அதிகமாக 97.57 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து 56 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 152 நாட்களுக்குப் பிறகு 3,53,398 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.09 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 15,85,681 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 50,62,56,239 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 2.00 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.95 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 27 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 76 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.