Site icon Metro People

வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட இந்திய ரூபாய்!: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.83-ஆக சரிவு..!!

டெல்லி: அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு குறைவது மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய பங்கு சந்தைகளில் தொடர் சரிவு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 83 காசுகளாக சரிந்திருக்கிறது. இந்திய பங்கு சந்தைகளில் உள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதும், கச்சா எண்ணெய் விலை உயர்வும், உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. கடந்த சில நாட்களாக கொஞ்சம் சீராக இருந்த ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

Exit mobile version