Site icon Metro People

ஜெயம் ரவியின் இறைவன்: ரிலீஸ் தேதி மாற்றம்?

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில்நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில்மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வை ஜனவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பான் இந்தியா முறையில் வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை. இதனால், ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version